Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

300 கோடி டாலர் நிதி திரட்டும் AM Intelligence

300 கோடி டாலர் நிதி திரட்டும் AM Intelligence

தனது கணினித் திறனைப் பயன்படுத்தவுள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து 30 கோடி டாலர் முன்பணம் கிடைக்கும் என்றும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

என்விடியாவின் அடுத்த தலைமுறை சிப்களை வாங்குவதற்காக, ஏஎம் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் 300 கோடி டாலர் வரை நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்புத் துறையில் செயல்படும் ஏஎம் இன்டெலிஜென்ஸ், ஏற்கெனவே அறிவித்துள்ள சிப் கொள்முதலுக்குத் தேவையான நிதியைத் திரட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ குழுமத்தின் நிறுவனர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடன் பத்திரங்கள், வங்கிக் கடன்கள் உள்ளிட்ட வழிகளில் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. எந்த வழியில் எவ்வளவு தொகை திரட்டுவது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மேலும், தனது கணினித் திறனைப் பயன்படுத்தவுள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து 30 கோடி டாலர் முன்பணம் கிடைக்கும் என்றும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 பேச்சுவார்த்தைகள் தொடக்க நிலையில் இருப்பதால், நிதித் தொகையும், நிபந்தனைகளும் மாறக்கூடும் என விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏஎம் இன்டெலிஜென்ஸ், 800 கோடி டாலர் மதிப்பிலான திட்டத்தின்கீழ் என்விடியாவின் ‘வேரா ரூபின்’ சிப்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளதாக கடந்த ஆகஸ்டில் அறிவித்திருந்தது. ஒரு ஜிகா வாட் கணினித் திறனை உருவாக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. ஆசியாவில் இந்த மேம்பட்ட கணினித் தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கவும் ஏஎம் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் முயல்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள அதன் மையம், ஒரு லட்சம் கோடி அளவுருக்கள் கொண்ட ஏஐ மாதிரிகளையும், அடுத்த தலைமுறை ஏஐ செயலிகளையும் இயக்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இந்த மையத்துக்கான மேம்பட்ட சிப்களைப் பெறுவதற்கே தற்போது பல்வேறு நிதி வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன.

உலகளவில் ஏஐ உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. வங்கிக் கடன்கள், தனியார் முதலீடு, வாடிக்கையாளர் முன்பணம் ஆகியவற்றை இணைத்து நிறுவனங்கள் பெருந்தொகை திரட்டுகின்றன. ஏஐ வளர்ச்சியுடன் தொடர்புடைய கடன் திரட்டல், இரண்டு ஆண்டுகளுக்குள் 65,000 கோடி டாலரைத் தாண்டியுள்ளது.

இதனிடையே, இந்தியாவின் தரவு மையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு, சேவைத் துறைகளில் 2034–35 நிதியாண்டுக்குள் 9,000 கோடி டாலர் முதலீட்டு வாய்ப்பு உருவாகலாம் என ஜூலையில் வெளியான கேபிஎம்ஜி அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி
அரசுப் பணி வயது உச்சவரம்பு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி
3 நிறுவனங்களுக்கு வாய்ப்பு - ரூ.1.64 லட்சம் கோடி சிப் திட்டங்கள்

தொடர்புடைய செய்திகள்